ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம் சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்
/

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா: அஸ்ஸாமில் முதல்வருக்கு எதிராக கருப்புக் கொடி போராட்டம்

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக அஸ்ஸாமில் போராட்டம் வலுத்து வரும் நிலையில், முதல்வர் சர்வானந்த சோனோவாலுக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி

Updated On :15 ஜனவரி 2019, 1:09 am IST


குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக அஸ்ஸாமில் போராட்டம் வலுத்து வரும் நிலையில், முதல்வர் சர்வானந்த சோனோவாலுக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி திங்கள்கிழமை மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அண்டை நாடுகளில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்த ஹிந்து, பார்ஸி, சீக்கியர்கள், பெளத்தர்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் வகையில், 1955-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு, 2016-ஆம் ஆண்டு குடியுரிமை சட்டத் திருத்த மசோதா கொண்டு வரப்பட்டது. அந்த மசோதா கடந்த வாரம் மக்களவையில் நிறைவேறியது. 
அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மாணவர் அமைப்புகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எனினும் அஸ்ஸாமில் கடந்த ஒரு வாரமாக தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மஜூலி தீவு பகுதிக்கு திங்கள்கிழமை வந்த அஸ்ஸாம் முதல்வர் சர்வானந்த சோனோவாலுக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய அரசு மற்றும் முதல்வருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். சர்ச்சைக்குரிய இந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதேபோன்று கல்லூரி பட்டமளிப்பு விழாவுக்கு சோனோவால் ஞாயிற்றுக்கிழமை சென்றிருந்தபோது, அவருக்கு எதிராக போராட்டக்காரர்கள் கருப்புக் கொடி ஏந்தி கோஷம் எழுப்பினர்.
அதுமட்டுமன்றி, சிவ்சாகர் மாவட்டத்தில் பத்திரிகையாளர்களும், மாணவர்களும் தனித்தனியே போராட்டத்தில் ஈடுபட்டனர். பத்திரிகையாளர்கள் நடத்திய போராட்டத்தில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும் கலந்து கொண்டார். பக்ஸா மாவட்டத்தில் உள்ள பாராமா பகுதியில் தேசிய நெடுஞ்சாலையை வழிமறித்து பழங்குடியின மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்வாறு அனைத்து தரப்பிலும் போராட்டம் வலுத்து வரும் நிலையில், மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் 18 மற்றும் 24-ஆம் தேதிகளில் தனியே போராட்டம் நடத்தப் போவதாக ஆளும் பாஜக கூட்டணியில் இருந்து விலகிய அஸ்ஸாம் கண பரிஷத் கட்சி அறிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.