வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

நிதித்துறை செயலர் அஜய் நாராயண் ஜாவுக்கு ஒரு மாதம் பணி நீட்டிப்பு

மத்திய நிதித்துறை செயலர் அஜய் நாராயண் ஜாவுக்கு ஒரு மாத காலம் பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :15 ஜனவரி 2019, 1:22 am IST


மத்திய நிதித்துறை செயலர் அஜய் நாராயண் ஜாவுக்கு ஒரு மாத காலம் பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது. இது தவிர 15-ஆவது நிதிக் குழுவின் உறுப்பினராகவும் அவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு திங்கள்கிழமை வெளியானது. முன்னதாக அவரது பணி நீட்டிப்புக்கு நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்தது.
1982-ஆம் ஆண்டு மணிப்பூரில் இருந்து ஐஏஎஸ் அதிகாரியான ஜாவின் பதவிக்காலம் வரும் ஜனவரி 31-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதன் பிறகு அவருக்கு ஒரு மாத காலம் பதவி நீட்டிப்பு அளிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து வரும் மார்ச் 1-ஆம் தேதி முதல் 15-ஆவது நிதிக்குழுவின் உறுப்பினர் பொறுப்பை அவர் ஏற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதிக் குழுவின் உறுப்பினராக இருந்த சக்திகாந்த தாஸ், ரிசர்வ் வங்கி ஆளுநராக அண்மையில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, அந்த இடம் காலியானது நினைவுகூரத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.