காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேராவின் நெருங்கிய உதவியாளர் மனோஜ் அரோராவிடம் அமலாக்கத் துறை திங்கள்கிழமை விசாரணை நடத்தியது.
ஆயுத தரகர் பண்டாரிக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் அண்மையில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் சிக்கிய டிஜிட்டல் ஆவணங்கள் மூலம், லண்டனில் 1.9 மில்லியன் பவுண்ட் மதிப்பில் பண்டாரி எஸ்டேட் வாங்கியதும், பிறகு அதே விலையில் அதை விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, பண்டாரியின் உறவினர் சுமித் சதாவின் மின்னஞ்சலை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில் பண்டாரி, ராபர்ட் வதேரா, மனோஜ் அரோரா ஆகியோர் அடிக்கடி மின்னஞ்சல் மூலம் தகவல் பரிமாற்றம் செய்தது தெரிய வந்தது. இதையடுத்து அரோரா மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்த விவகாரத்தில், லண்டனில் வாங்கப்பட்ட சொத்துக்கு ராபர்ட் வதேராதான் உண்மையான உரிமையாளராக இருக்கலாம், சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மூலம் அந்த சொத்து வாங்கப்பட்டிருக்கலாம் என்று அமலாக்கத்துறை
சந்தேகிக்கிறது. இதை அறிந்து கொள்ளும் வகையில், மனோஜ் அரோராவிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை முடிவு செய்தது.
இதன்படி, தில்லியில் மனோஜ் அரோராவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை நடத்தினர்.
இதேபோல் கடந்த வாரமும் அவரிடம் இருமுறை அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தின்கீழ் அவரது வாக்குமூலத்தை அதிகாரிகள் பதிவு செய்தனர்.
ராபர்ட் வதேராவின் ஸ்கைலைட் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனத்தில் மனோஜ் அரோரா பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 25 - நேரலை

இரண்டாம் பாதியில் களமிறங்கிய நெய்மர்: நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது பிரேசில்!

கோவைப் புதூா் பகுதியில் முள்புதரில் கிடந்த இளம்பெண் சடலம்! காரணம் என்ன?
எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா கூகுள் பிக்சல் 11 ப்ரோ? சிறப்புகள் என்னென்ன?
விடியோக்கள்

UN Kannan Interview | விஜய், உதயநிதி மோதல் தொடர்ந்தால்...? | CM Vijay | TVK | Udhayanidhi | DMK

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |


