நாட்டின் அடுத்த பிரதமராக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருவதை திரிணமூல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி விரும்பவில்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கௌரவ் கோகோய் புகார் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க மாநிலம், ராம்பூர்ஹட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
கொல்கத்தாவில் அண்மையில் திரிணமூல் காங்கிரஸ் ஏற்பாட்டின்பேரில், எதிர்க்கட்சிகளின் பேரணி நடைபெற்றது. ஆனால், அக்கட்சிக்கு ராகுல் காந்தியுடன் ஏதோ பிரச்னை உள்ளது.
நாட்டின் அடுத்த பிரதமராக ராகுல் காந்தி வருவதை அக்கட்சியும், மம்தா பானர்ஜியும் விரும்பவில்லை. நாட்டின் அடுத்த பிரதமராக ராகுல் காந்திதான் பதவியேற்பார், மத்தியில் அடுத்து ராகுல் காந்தி தலைமையில்தான் புதிய அரசு பதவியேற்கும் என்பதை அக்கட்சிக்கு நான் உறுதியாக தெரிவிக்கிறேன்.
நாட்டின் பிரதமராக மம்தா பானர்ஜி பதவியேற்க முடியாது என்பதை தெரிந்து கொண்டதால், திரிணமூல் காங்கிரஸார் நிம்மதியில்லாமல் தவிக்கின்றனர் என்றார் அவர்.
திரிணமூல் காங்கிரஸ் பதில்: இதனிடையே, கௌரவ் கோகாய் குற்றச்சாட்டுக்கு திரிணமூல் காங்கிரஸ் பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் பொது செயலாளர் பார்த்தா சட்டர்ஜி கூறுகையில், எதிர்க்கட்சிகளின் பேரணியில் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர். இதை மறந்துவிட்டு அவர் பேசுகிறார் என்றார்.
அதேநேரத்தில், காங்கிரஸ் கட்சியின் மேற்குவங்க மாநில தலைவர் சோமன் மித்ரா, மக்களவைத் தேர்தலில் மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸுடன் தங்கள் கட்சி கூட்டணி அமைக்காது என்றார். அவர் மேலும் கூறுகையில், மேற்குவங்கத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளிலும் காங்கிரஸ் போட்டியிட விரும்புகிறது; திரிணமூல் காங்கிரஸ், பாஜகவை எதிர்க்க விரும்பும், மதச்சார்பற்ற கட்சிகள் காங்கிரஸுடன் கூட்டணி சேர விரும்பினால், அக்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றார்.
கொல்கத்தாவில் அண்மையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஏற்பாட்டின் பேரில் எதிர்க்கட்சிகளின் பேரணி நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்தப் பேரணிக்கு ராகுல் காந்தி, அவரது தாயார் சோனியா காந்தி ஆகியோர் தங்களது வாழ்த்துகளை அனுப்பியிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வார பலன்கள் (மே 8 - 14) - மகரம்

வார பலன்கள் (மே 8 - 14) - தனுசு

வார பலன்கள் (மே 8 - 14) - விருச்சிகம்

CPI, CPIM கட்சிகள் ஆதரவு! TVK தொண்டர்கள் கொண்டாட்டம்!
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை
