தமிழ்நாட்டை ஆளும் கட்சியாக விசிக மாறும்! மாநாட்டில் திருமாவளவன் பேச்சுவிசிகவும் தவெகவும் இனி இணைந்தே பயணிக்கும்: திருமாவளவன்சுதந்திர நாளன்று மிகப்பெரிய சதி முறியடிப்பு! ஐஎஸ்ஐ தொடர்புடைய 253 பயங்கரவாதிகள் கைது! ராகுல் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு! சிபிஐ விசாரணையை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டுக்கு காவிரி நீர் திறக்க கர்நாடகத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு! அமைச்சர் பேசியதற்கு பேரவையில் மன்னிப்பு கோரிய முதல்வர் விஜய்!முதல்வர் விஜய்யின் எம்.எல்.ஏ. அலுவலகம் முற்றுகை!ரூ. 75,000 வரையிலான பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி! முதல்வர் விஜய் அறிவிப்புஆதவ் அர்ஜுனா பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த பேரவைத் தலைவர்!மகளிர் உரிமைத் தொகை ரூ. 2,000; சிலிண்டர்கள் எங்கே? திமுக முன்னாள் அமைச்சர் கேள்வி!போதைப்பொருளுக்கு எதிராக சிறப்புப் பிரிவை உருவாக்கியது திமுகதான்! உதயநிதி
/

வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லை; வருமான வரித் தாக்கலுக்கு பான் எண் தேவையில்லை!

வருமான வரித் தாக்கல் செய்ய பான் அட்டை இல்லை என்றாலும், அதற்குப் பதிலாக ஆதார் அட்டையைப் பயன்படுத்தலாம் என்று மத்திய நிதித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :31 ஜனவரி 2024, 2:56 pm IST

புது தில்லி: வருமான வரித் தாக்கல் செய்ய பான் அட்டை இல்லை என்றாலும், அதற்குப் பதிலாக ஆதார் அட்டையைப் பயன்படுத்தலாம் என்று மத்திய நிதித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


2019 - 2020ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் கூறப்பட்டிருக்கும் சில முக்கிய விஷயங்கள்..

பெரும்பாலான மக்களின் எதிர்பார்ப்பே வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றம் செய்யப்படுமா என்பதே.

அதற்கான விடை.. 

வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் மாற்றமில்லாமல், ஏற்கனவே உள்ளபடி, ரூ.5 லட்சம் வரை வருவாய் பெறுவோருக்கு வரி செலுத்துவதில் விலக்கு அளிக்கப்படும் நிலையே தொடருகிறது.

மேலும், ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் பணமாக வங்கிக் கணக்கில் இருந்து எடுத்தால் வரி பிடித்தம் (டீடிஎஸ்) 2% ஆக இருக்கும்.

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதோடு, டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம் ரத்து  செய்யப்படுகிறது.

5 லட்சத்துக்குக் கீழ் வருவாய் பெறுவோருக்கு வரி விலக்கு அளிக்கப்படுவது தொடர்கிறது.

அதே சமயம், ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை ஆண்டு வருமானம் பெறுவோருக்கு 3% கூடுதல் வரி (சர்சார்ஜ்) விதிக்கப்படுகிறது.

ஆண்டு வருமானம் ரூ.5 கோடிக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 7% கூடுதல் வரி (சர்சார்ஜ் வசூலிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.