நாடு முழுவதும் சிபிஐ அதிரடி சோதனை
ஊழல், ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட 30 வழக்குகளின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.


நாடு முழுவதும் 19 மாநிலங்களில் ஊழல், கிரிமினல் குற்றம், ஆயுதக் கடத்தல் உள்ளிட்ட 30 வழக்குகளின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்கிழமை அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தில்லி, மும்பை, சண்டிகர், ஜம்மு, ஸ்ரீநகர், புணே, ஜெய்பூர், கோவா, கான்பூர், ஹைதராபாத், மதுரை, கொல்கத்தா, ராஞ்சி, லக்னௌ நகரங்கள் உட்பட தமிழகம், உத்தரப்பிரதேசம், ஒடிஸா, பஞ்சாப் மற்றும் ஆந்திரப்பிரதேசம் என 19 மாநிலங்களுட்பட்ட 110 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ரூ.1,139 கோடி வங்கி ஊழல் தொடர்பாக வங்கி அதிகாரிகள் உட்பட 13 தனியார் நிறுவனங்களில் ஜூலை மாத துவக்கத்தில் நாடு முழுவதும் இதுபோன்று அதிரடிச் சோதனைகள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...