முதல்வராகத் தொடர விருப்பமில்லை என்று அவசரக் கூட்டம் தொடங்கும்போதே அறிவித்துவிட்டேன் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் கடும் வன்முறைகளுக்கு இடையே நடைபெற்ற 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பாஜக பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. கடந்த முறை 2 மக்களவைத் தொகுதிகளில் மட்டுமே வென்றிருந்த பாஜக இம்முறை 18 மக்களவைத் தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் கடந்த முறை 34 தொகுதிகளில் வென்றிருந்தது. ஆனால், இம்முறை 22 இடங்களாக சரிந்தது. அதுமட்டுமல்லாமல் 8 சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் 4 இடங்களில் பாஜக வென்றுள்ளது. திரிணமூல் காங்கிரஸ் 3 தொகுதிகளை மட்டுமே தக்க வைத்தது. மேலும் அம்மாநிலத்தில் பாஜக-வின் வாக்கு சதவீதம் 40.25-ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் அவசரக் கூட்டத்துக்கு அக்கட்சித் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்தார். அவரது இல்லத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற இந்த கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மம்தா கூறியதாவது:
மிக நீண்ட தேர்தலாக இது அமைந்திருந்ததால் கடந்த 5 மாதங்களாக பணி செய்வதில் மிகப்பெரிய சிரமம் ஏற்பட்டது. மத்தியப் படைகள் அனைத்தும் எங்களுக்கு எதிராக செயல்பட்டது. அறிவிக்கப்படாத அவசர நிலை ஏற்படுத்தப்பட்டது. வாக்குகளுக்காக ஹிந்து, முஸ்லிம் இடையே பிரிவினை ஏற்படுத்தப்பட்டது.
இதுகுறித்து எல்லாம் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் அவர்கள் பாஜக மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இத்தனை தடைகளைக் கடந்தும் எங்களுடைய வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. இதுபோன்ற ஆபத்தான சூழலில் எதுவும் பாவமில்லை. நாங்கள் காங்கிரஸ் போன்று அடிபணியவும் இல்லை.
எனக்கு முதல்வராகத் தொடர விருப்பமில்லை. இதை கூட்டம் தொடங்கும்போதே கட்சியினரிடையே அறிவித்துவிட்டேன் என்று பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் மே 26 - நேரலை!
தொகுதி நலனுக்காக தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம்

மே 30 - நெல்லை - திருச்செந்தூர் முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம்!

அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில்... ஆரோக்கியமான அரசியலுக்கு ஏற்புடையதல்ல: சிபிஎம் விமர்சனம்!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



