மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நாங்கள் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில்தான இருப்போம்: நிம்மதியளித்த நிதிஷ்குமார் 

நாங்கள் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில்தான இருப்போம் என்று பாஜகவுடன் உரசலா என்று எழுந்த கேள்விகளுக்கு பிகார் முதலவர் நிதிஷ்குமார் பதிலளித்துள்ளார்.

News image
Updated On :31 மே 2019, 11:07 am

IANS

புது தில்லி: நாங்கள் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில்தான இருப்போம் என்று பாஜகவுடன் உரசலா என்று எழுந்த கேள்விகளுக்கு பிகார் முதலவர் நிதிஷ்குமார் பதிலளித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் அபார வெற்றி பெற்றதையடுத்த மோடி தலைமையிலான பாஜக அரசு தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. பிரதமர் மோடி வியாழனன்று இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்தவர்கள் என்று மொத்தம் 57 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

பாஜவின் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதாதள தலைவரும், பிகார் முதல்வருமான நிதிஷ்குமார் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொண்டார். ஆனால் அக்கட்சி இந்த அமைச்சரவையில் பங்கேற்கவில்லை. இதன்காரணமாக இரு கட்சிகளிடையே உரசல் என்று பேச்சு எழுந்தது.

இந்நிலையில் நாங்கள் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணியில்தான இருப்போம் என்று பாஜகவுடன் உரசலா என்று எழுந்த கேள்விகளுக்கு பிகார் முதலவர் நிதிஷ்குமார் பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக வெள்ளியன்று தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

நாங்கள் பாஜவுடன்தான் உள்ளோம். தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் நீடிக்கிறோம், கூட்டணிக்  கட்சிகள் ஒவ்வொன்றிற்கும் ஒரு கேபினட் அமைச்சர் பதவி வழங்க பாஜக முன்வந்தது. ஆனால் அதனை எங்கள் தலைவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. அதை வெறுமனே வெளி காட்சிக்கான ஒன்று என கருதினார்கள்.  எனவே நாங்கள் அமைச்சரவையில் பங்கேற்கவில்லை.            

நாங்கள் அரசில் எந்தப் பதவியோ அல்லது இலாகவோ கோரவில்லை. எங்களுக்கு எந்த விதமான வருத்தமோ அல்லது கோபமோ இல்லை.  நாங்கள் தொடர்ந்து மத்திய அரசை ஆதரிக்கிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.