மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராஜஸ்தானில் பேருந்து - லாரி நேருக்கு நேர் மோதல்: 11 பேர் பலி!

ராஜஸ்தானில் பேருந்து மற்றும் லாரி ஒன்று நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 15 பேர் வரையில் கொல்லப்பட்டனர். 

News image
Updated On :18 நவம்பர் 2019, 7:01 am

DIN

ராஜஸ்தானில் பேருந்து மற்றும் லாரி ஒன்று நேருக்கு நேர் மோதியதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 15 பேர் வரையில் கொல்லப்பட்டனர். 

ராஜஸ்தான் மாநிலம் லகாசர் கிராமம் அருகே பிகானேர் என்ற இடத்தில் திங்கள்கிழமை காலை, பேருந்து ஒன்று எதிரே வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர்  உயிரிழந்துள்ளனர். மேலும், 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். காயமடைந்த 15 பேரில், மூன்று பேர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

Story image

முன்னதாக, இரு வாகனங்களும் வேகமாக மோதியதால் இரு வாகனங்களும் தீ பிடித்தன. இதையடுத்து, காவல்துறையினர் மற்றும் தீயணைப்புப் படையினருக்கு உள்ளூர் மக்கள், தகவல் தெரிவித்ததையடுத்து, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து பல மணி நேரம் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். 

மேலும், விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து குறித்து மாநில முதல்வர் அசோக் கெலாட் தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.