ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அம்பேத்கர் சிலையை சேதம் செய்த மர்ம நபர்கள்! உ.பியில் பரபரப்பு..

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

News image
BR Ambedkar
Updated On :9 அக்டோபர் 2019, 10:43 am

DIN

உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தில் திகாய் என்ற கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலையை மர்ம நபர்கள் சிலர் சேதப்படுத்தியுள்ளனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் பரபரப்பானது. 

பின்னர் தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதற்குள்ளாக சிலையை சேதப்படுத்தியவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து, போலீசார் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். 

சிலையை சேதப்படுத்தியதற்காக அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்ததையடுத்து, கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். மேலும், சேதமடைந்த சிலையும் உடனடியாக சரிசெய்யப்பட்டது. 

அம்பேத்கர் சிலை சேதமடைந்த சம்பவத்தையொட்டி, கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.