உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் பதவியேற்பு

உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட 4 நீதிபதிகள் திங்கள்கிழமை பதவியேற்றனர். அதையடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் பதவியேற்பு


உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக நியமனம் செய்யப்பட்ட 4 நீதிபதிகள் திங்கள்கிழமை பதவியேற்றனர். அதையடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது.
உச்சநீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதைக் கருத்தில் கொண்டு, காலியாக இருந்த 4 உச்சநீதிமன்ற நீதிபதிகள் பதவிக்கு ஹிமாசலப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த வெ.இராமசுப்பிரமணியன், பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த கிருஷ்ண முராரி, ராஜஸ்தான் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.ரவீந்திர பட், கேரள உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த ரிஷிகேஷ் ராய் ஆகியோர் கடந்த வாரம் நியமிக்கப்பட்டனர்.
இந்நிலையில், தில்லியில் உச்சநீதிமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் முன்னிலையில், அவர்கள் 4 பேரும் பதவியேற்றனர். அதையடுத்து, நீதிபதிகள் எண்ணிக்கையில் முழு பலத்துடன் உச்சநீதிமன்றம் செயல்படவுள்ளது. உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ள வெ.இராமசுப்பிரமணியன், தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தவிர்த்து 30 நீதிபதிகளுக்கான பணியிடங்கள் முன்னர் அனுமதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில், சுமார் 59, 350 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மாநிலங்களவையில் கடந்த ஜூலை மாதம் தெரிவிக்கப்பட்டதையடுத்து, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கடிதம் எழுதினர். 
உச்சநீதிமன்றத்தின் இந்த கோரிக்கையை ஏற்று, கடந்த ஆகஸ்ட் மாதம், நீதிபதிகளின் எண்ணிக்கையை 30-இல் இருந்து 33-ஆக அதிகரிக்க மத்திய அரசு சட்டமியற்றியது. அதையடுத்து தலைமை நீதிபதியோடு சேர்த்து, உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com