ராஜஸ்தானில் மினி பேருந்து - ஜீப் மோதல்: 13 பேர் உயிரிழப்பு
ராஜஸ்தானில் மினி பேருந்து ஜீப் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.


ராஜஸ்தானில் மினி பேருந்து ஜீப் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர்.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் ஜெய்சல்மர்-ஜோத்பூர் நெடுஞ்சாலையில் பயணிகளுடன் மினி பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்து ததனியா எனும் கிராம் அருகே வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக பேருந்தின் முன்புற டயர் வெடித்தது.
இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து சாலையின் மறுபுறம் வந்துகொண்டிருந்த ஜீப் மீது மோதியது. இந்த விபத்தில் 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...