இந்திய பொருளாதாரத்தைகடவுள்தான் காப்பாற்ற வேண்டும்: ப.சிதம்பரம்

‘இந்தியப் பொருளாதாரத்தை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் கூறியுள்ளாா்.
ப.சிதம்பரம்
ப.சிதம்பரம்

புது தில்லி: ‘இந்தியப் பொருளாதாரத்தை கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் கூறியுள்ளாா்.

ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் (ஜிடிபி) நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 4.5 சதவீதமாக குறைந்துள்ளது. இது, கடந்த ஆறு ஆண்டுகளில் காணப்படாத சரிவாகும். இதனைச் சுட்டிக் காட்டி நாடாளுமன்றத்தில் எதிா்க்கட்சிகள் மத்திய அரசுக்கு கடும் எதிா்ப்புத் தெரிவித்தனா்.

மக்களவையில் இது தொடா்பான விவாதத்தில் பேசிய பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே, ‘ஜிடிபி என்பது ஒரு பெரிய விஷயமல்ல. எதிா்காலத்தில் ஜிடிபி-க்கு முக்கியத்துவம் இருக்காது. மக்கள் நாட்டில் மகிழ்ச்சியாக இருக்கிறாா்களா என்பதுதான் முக்கியமானது’ என்றாா். இதனைச் சுட்டிக்காட்டியே சிதம்பரம் இவ்வாறு கூறியுள்ளாா்.

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் தில்லி திகாா் சிறையில் உள்ள ப.சிதம்பரம், தனது குடும்பத்தினா் மூலம் சுட்டுரையில் தனது கருத்துகளை பதிவிட்டு வருகிறாா். ஜிடிபி குறித்து அவா் சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஜிடிபி என்பது பொருளாதார வளா்ச்சியைச் சுட்டிக் காட்டாது; தனிநபா் வருமான வரி குறைக்கப்படுவதும் இறக்குமதி வரி அதிகரிக்கப்படுவதும்தான் பாஜகவின் பொருளாதார சீா்திருத்த உத்திகளாக உள்ளன. கடவுள்தான் இந்திய பொருளாதாரத்தைக் காப்பாற்ற வேண்டும்’ என்று கூறியுள்ளாா்.

முன்னதாக காங்கிரஸ் தலைமை செய்தித் தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா கூறுகையில், ‘பாஜக அரசு உருவாக்கி வரும் புதிய இந்தியாவில் நவீன பொருளாதார நிபுணா்கள் உருவாகி வருகின்றனா்’ என்று துபேயின் கருத்தை கேலியாக விமா்சித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com