சட்டம் தன் கடமையைச் செய்தது: காவல் ஆணையர் சொன்ன பதில்

தெலங்கானா என்கவுன்டர் சம்பவத்தில், குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டதில் சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது என்று சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் தெரிவித்துள்ளார்.
சட்டம் தன் கடமையைச் செய்தது: காவல் ஆணையர் சொன்ன பதில்


ஹைதராபாத்: தெலங்கானா என்கவுன்டர் சம்பவத்தில், குற்றம்சாட்டப்பட்ட 4 பேரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டதில் சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது என்று சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் தெரிவித்துள்ளார்.

திசையெங்கும் இன்று தெலங்கானாவும் என்கவுன்டரும்தான் தேசியச் செய்தி மட்டுமல்ல.. தலைப்புச் செய்தியே.

அந்த சம்பவம் நடந்தது எப்படி என்பது குறித்து இன்று பிற்பகலில், சம்பவ இடத்திலேயே செய்தியாளர்களை சந்தித்தார் சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார்.

அப்போது அவர் சம்பவம் பற்றி பல்வேறு விஷயங்களை விளக்கினார். 
பெண் மருத்துவரின் செல்போனை தாங்கள் மறைத்து வைத்திருப்பதாகவும், அதனை எடுத்துத் தருவதாகவும் கூறியதால் குற்றம்சாட்டப்பட்டவர்களை சம்பவ இடத்துக்கு அழைத்து வந்ததாகக் கூறினார்.

இன்று அதிகாலை, நான்கு பேரையும், சம்பவ இடத்தில் குற்றத்தை எப்படி செய்தார்கள் என்று நடித்துக் காட்டும்படி சொன்னோம். அப்போது திடீரென சென்னகேசவலு, முகமது ஆரிஃப் ஆகியோர் எங்களது கையில் இருந்து துப்பாக்கியைப் பிடுங்கி எங்களை நோக்கி சுடத் தொடங்கினர். முகமது ஆரிஃப்தான் எங்களை நோக்கி சுட்டார். 

நான்கு பேரையும் பாதுகாப்பாகவே அழைத்து வந்தோம். எங்களுடன் 10 காவலர்கள் இருந்தனர். ஆனால் எதிர்பாராதவிதமாக எங்களது துப்பாக்கியை அவர்கள் பறித்துவிட்டனர். முதலில் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினோம்

ஒரு கட்டத்தில் போலீஸார் மீது நான்கு பேரும் சேர்ந்து கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.  இதில் எஸ்.ஐ. வெங்கடேஷ் உள்ளிட்ட இரண்டு எஸ்.ஐ.க்கள் காயமடைந்தனர்.]

நான்கு பேரும் எங்களை தாக்கியபோதும் கூட போலீசார் அமைதி காத்தனர். சரணடைய வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால், வேறு வழியில்லாமல் எங்களைத் தற்காத்துக் கொள்ள நான்கு பேரையும் என்கவுன்டர் செய்தோம். சுமார் 15 நிமிடங்கள் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இன்று காலை 5.45 மணி முதல் 6.15 மணிக்குள் என்கவுன்டர் நடந்தது என்று கூறினார்.

இறுதியாக அவர் கூறுகையில், நான்கு பேரும் என்கவுண்டர் செய்யப்பட்டதில் சட்டம் தன் கடைமையைச் செய்துள்ளது. என்கவுன்டர் குறித்து மாநில அரசுக்கும் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கும் விரிவான அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று சைபராபாத் காவல் ஆணையர் சஜ்ஜனார் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com