அயோத்தி தீர்ப்பை யாருடைய வெற்றி, தோல்வியாகவும் பார்க்கக்கூடாது: பிரதமர் மோடி

அயோத்தி வழக்கின் தீர்ப்பை யாருடைய வெற்றி, தோல்வியாகவும் பார்க்கக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.
அயோத்தி தீர்ப்பை யாருடைய வெற்றி, தோல்வியாகவும் பார்க்கக்கூடாது: பிரதமர் மோடி

அயோத்தி வழக்கின் தீர்ப்பை யாருடைய வெற்றி, தோல்வியாகவும் பார்க்கக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

அயோத்தியிலுள்ள 2.77 ஏக்கா் சா்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து  நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. இவ்வழக்கில் ஐந்து நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பை வழங்கியுள்ளனர். 

சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என்றும் அதே நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்டுவதற்கு 5 ஏக்கர் மாற்று நிலம் வழங்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அயோத்தி வழக்கின் தீர்ப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில், 'அயோத்தி வழக்கின் தீர்ப்பை யாருடைய வெற்றி, தோல்வியாகவும் பார்க்கக்கூடாது. 

ராம் பக்தியாக இருந்தாலும், ரஹீம் பக்தியாக இருந்தாலும், ராஷ்டிர பக்தியின் உணர்வை நாம் பலப்படுத்துவது அவசியம். நீதிபரிபாலனத்தின் முக்கியத்துவத்தை இந்தத் தீர்ப்பு உணர்த்தியிருக்கிறது. நாட்டு மக்கள் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை பேண வேண்டும். 

அயோத்தி வழக்கில் நீதித்துறையின் முடிவு சாமானிய மக்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்தும். ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நாம் கடைப்பிடித்து வந்த சகோதரத்துவ மனப்பான்மைக்கு ஏற்ப, 130 கோடி இந்தியர்களும் அமைதியையும் கட்டுப்பாட்டையும் கடைபிடிப்பது அமைதியான ஒரு வாழ்வுக்காக நாட்டின் மீதுள்ள உள்ளார்ந்த உணர்வை வெளிப்படுத்துகிறது. நமது ஒற்றுமை இந்த தேசத்தின் வளர்ச்சிக்கு வழிவகுக்கட்டும். 

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு பல வகைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரு சர்ச்சையைத் தீர்ப்பதில் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றுவது எவ்வளவு முக்கியம் என்பதை இது காட்டுகிறது. வழக்கில் தொடர்புடைய ஒவ்வொரு தரப்பினருக்கும் அவர்களது வாதங்களை முன்வைக்க போதுமான நேரமும் வாய்ப்பும் வழங்கப்பட்டது. இது நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை அதிகரிக்கும். நமது நீதித்துறையின் சுதந்திரம், வெளிப்படைத்தன்மை மற்றும் தொலைநோக்கு ஆகியவற்றை மீண்டும் இந்தத் தீர்ப்பு உறுதிப்படுத்துகிறது. சட்டத்தின் முன் எல்லோரும் சமம் என்பதை இது தெளிவாக விளக்குகிறது' என்று பதிவிட்டுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com