அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சோனியாவுடன் சரத் பவார் சந்திப்பு: மகாராஷ்டிர தொகுதிப் பங்கீடு ஆலோசனை

மகாராஷ்டிரத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.

News image
Updated On :10 செப்டம்பர் 2019, 7:59 pm

DIN


மகாராஷ்டிரத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, தில்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் செவ்வாய்க்கிழமை சந்தித்தார். இருவரும் தொகுதிப் பங்கீடு குறித்து ஆலோசித்தனர்.
289 இடங்களைக் கொண்ட மகாராஷ்டிர சட்டப் பேரவையின் பதவிக் காலம் வரும் அக்டோபருடன் முடிவடைய உள்ளது. அதனால் அங்கு விரைவில் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில், காங்கிரஸ் கட்சியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தில்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்தில் அவரை சரத் பவார் செவ்வாய்க்கிழமை சந்தித்தார். இதுதொடர்பாக கட்சி வட்டாரங்கள் கூறுகையில், பேரவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர். விரிவான பேச்சுவார்த்தை வரும் நாள்களில் நடைபெறவுள்ளது. அதன் பின்னர், இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும் என்றன.
கடந்த சில வாரங்களாக, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் மாநில தலைவர்கள் பல முறை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். 
தொகுதி பங்கீடு பிரச்னை காரணமாக கடந்த 2014ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலின்போது காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் தனித்து போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.