மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராஜஸ்தானில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 363 ஆக உயர்வு 

ராஜஸ்தானில் புதன்கிழமை மாலை நிலவரப்படி கரோனா நோய்த் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 363 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

News image
கரோனா வைரஸ்
Updated On :8 ஏப்ரல் 2020, 11:57 am

PTI


ராஜஸ்தானில் புதன்கிழமை மாலை நிலவரப்படி கரோனா நோய்த் தொற்றால் பாதித்தோரின் எண்ணிக்கை 363 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

உலக நாடுகளை உலுக்கிவரும் கரோனா நோய்த் தொற்றுக்குப் பலியானோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், ராஜஸ்தானில் இதுவரை 363 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் பலியாகியுள்ளனர். 

இன்று மட்டும் கஜானாவுக்குப் புதிதாக 20 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில் 12 பேர் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர்கள் ஆவர். ராஜஸ்தான் தலைநகரில் மொத்தம் 118 பேர் கரோனா பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஜெய்ப்பூரில் கரோனா பாதித்த 62 வயதான முதியவர் எஸ்.எம்.எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தனியார் நிறுவனத்தின் ஊழியரான அவர் காவந்தியா மருத்துவமனையிலிருந்து எஸ்எம்எஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகக் கூடுதல் தலைமைச் செயலர் ரோஹித் குமார் சிங் கூறியுள்ளார். 

கரோனா பாதித்த மீதமுள்ளவர்கள் தப்லீக் ஜமாத் மாநாட்டில் பங்கேற்றவர்களின் தொடர்புடையவர்கள் ஆகும். தில்லியில் நிஜாமுதீன் பகுதியில் நடந்த இந்த மாநாட்டில் பங்கேற்ற பலர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மார்ச் 22 முதல் ராஜஸ்தானில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பல இடங்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.