ராஜஸ்தானில் 65 வயது மூதாட்டி பலி: புதிதாக 26 பேருக்கு கரோனா உறுதி
ராஜஸ்தானில் 65 வயது பெண் கரோனா தொற்று நோய்க்கு இன்று உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 65 வயது மூதாட்டி கரோனா தொற்று நோய்க்கு இன்று உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகளவில் ஆட்கொல்லி நோயான கரோனா வைரஸ் நாளுக்கு நாள் பல உயிர்களை பலிவாங்கி வருகின்றது. இந்நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டும், மக்கள் தனிமைப்படுத்தப்பட்டும் உள்ளனர்.
இந்நிலையில், ராஜஸ்தானில் 65 வயதுள்ள பெண் கரோனாவுக்கு இன்று பலியாகியுள்ளார். நோய்த் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 489 ஆக அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி 26 பேருக்குப் புதிதாக கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. பலியானோர் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
ஜெய்ப்பூரில் உள்ள ராம்கஞ்சைச் சேர்ந்த பெண் புதன்கிழமை எஸ்.எம்.எஸ் மருத்துவமனையில் சுவாசக் கோளாறு, நிமோனியா மற்றும் உயர் ரத்த அழுத்தம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
கடந்த 12 மணி நேரத்தில் 26 பேருக்கு புதிதாக கரோனா பதிவாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 12 பேர் பன்ஸ்வாராவிலும், 8 பேரில் 3 ஜெய்சால்மேர் மற்றும் ஆல்வார், பரத்பூர் மற்றும் கோட்டாவில் தலா ஒன்றும் பதிவாகியுள்ளது. இதுவரை மொத்தம் 489 பேர் கரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 168 பேர் ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர்கள் ஆவார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...