கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாட்டில் ஊரடங்கு மே மாதம் 3 வரை நீட்டிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று அறிவித்தார்.
இன்று காலை 10 மணிக்கு மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றிய போது இந்த அறிவிப்பை வெளியிட்டார். அப்போது அவரை தொலைக்காட்சி வாயிலாக பார்த்துக் கொண்டிருந்த மணிப்பூர் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.
அதற்குக் காரணம், மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது அவர் ஒரு சால்வையை அணிந்திருந்தார். அது மணிப்பூர் மக்களின் பாரம்பரிய சால்வையாகும். அஸ்ஸாம் மக்கள் பயன்படுத்தும் கமோசா சால்வை போன்று இது மணிப்பூரி மக்களின் லெங்யான் சால்வை என்று அழைக்கப்படுகிறது.
இது குறித்து மணிப்பூர் முதல்வர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, மணிப்பூர் மாநிலத்தின் பாரம்பரிய சால்வையை பிரதமர் நரேந்திர மோடி பயன்படுத்தியதற்கு எனது மனப்பூர்வ பாராட்டுகள். இதன் மூலம், அவர் வடகிழக்கு மாநிலங்களை குறிப்பாக மணிப்பூரை எந்த அளவுக்கு நேசிக்கிறார் என்பது வெளிப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அதிக வாக்குப்பதிவு! மக்களுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் இபிஎஸ் நன்றி!

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு

தமிழகத்தில் மயோனைஸுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு!

மீண்டும் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் பாகம்!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


