மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ராஜஸ்தானில் புதிதாக 25 பேருக்கு கரோனா: பாதிப்பு 1,101 ஆனது

ராஜஸ்தானில் இன்று காலை நிலவரப்படி மேலும் 25 பேருக்கு புதிதாக கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக

News image
Updated On :16 ஏப்ரல் 2020, 5:50 am

PTI


ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இன்று காலை நிலவரப்படி மேலும் 25 பேருக்கு புதிதாக கரோனா நோய்த் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

டோங்க் (11), ஜோத்பூர் (10), ஜுன்ஜுனுவில் (2), பிகானேர் மற்றும் அஜ்மீரில் தலா ஒன்றும் பதிவாகியுள்ளது. 

நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்துக்கொண்டே செல்லும் நிலையில், இன்று புதிதாக 25 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 1,101 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். 

37,860 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அதில் 1,101 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் 31,902 பேருக்கு கரோனா இல்லையென்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 4,857 பேரின் மாதிரிகளின் முடிவுக்காகக் காத்திருக்கின்றனர். 

இதுவரை அம்மாநிலத்தில் 157 பேர் குணமாகியுள்ளனர். அவர்களில் 82 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.