ராஜஸ்தானில் மேலும் 38 பேருக்கு கரோனா உறுதி: பாதிப்பு 1,169 ஆக உயர்வு
ராஜஸ்தானில் கரோனா நோய்த் தொற்று பாதித்த 56 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார்.

கோப்புப்படம்

கோப்புப்படம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் கரோனா நோய்த் தொற்று பாதித்த 56 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார். அம்மாநிலத்தில் இதுவரை நோய்த்தொற்றுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,169 ஆக உயர்ந்துள்ளது.
ஜோத்பூரில் உள்ள எம்.டி.எம் மருத்துவமனையில் கடந்த புதன்கிழமை இருதய பிரச்னை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்ட நிலையில் வியாழக்கிழமை இரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இன்று புதிதாகப் பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட 38 பேரில், ஜோத்பூர் 18, டோங் 6, ஜெய்ப்பூர் 5, கோட்டா 4, நாகூர் 2, அஜ்மீர், ஜலாவர் மற்றும் ஜுன்ஜுனு தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 16 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ள நிலையில், 1,169 பேர் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...