/

ஜம்மு காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை 

ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும்

News image
Updated On :17 ஏப்ரல் 2020, 6:23 am

PTI

ஜம்மு-காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 

தெற்கு காஷ்மீரில் உள்ள சோபியானில் உள்ள டாய்ரூ பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருந்ததாகப் பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. 

அதன்படி பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட போது மறைந்திருந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதனிடையே இருதரப்பில் கடும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.