/

அவுரங்காபாத்தில் 65 வயது மூதாட்டி கரோனாவுக்கு பலி

மகாராஷ்டிராவின் அவுரங்காபாத் நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில்

News image
Updated On :18 ஏப்ரல் 2020, 6:49 am

PTI

அவுரங்காபாத்: மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 65 வயது மூதாட்டி கரோனாவுக்கு சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளார் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

அவுரங்காபாத் மாவட்டத்தில் கரோனாவுக்கு இது மூன்றாவது பலியாகும் 

கடந்த ஏப்ரல் 13ம் தேதி தனியார் மருத்துவமனையிலிருந்து ஜி.எம்.சி.எச்.க்கு அனுப்பப்பட்டார், மேலும் அவரது இரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன, அதைத் தொடர்ந்து அவருக்கு கரோனா பாதிப்பு உறுதியானது. அவருக்கு ஏற்கெனவே உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் நிமோனியா உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். 

இதற்கிடையில், 15 வயது சிறுவனுக்கு வெள்ளிக்கிழமை இரவு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மகாராஷ்டிரத்தில் இதுவரை கரோனாவுககு பலியானோர் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.