மகாராஷ்டிரத்தில் விஷவாயு தாக்கி தொழிலாளர்கள் 3 பேர் பலி
மகாராஷ்டிர மாநிலத்தில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி மூன்று..


மகாராஷ்டிர மாநிலத்தில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும்போது விஷவாயு தாக்கி மூன்று தொழிலாளர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்கர் மாவட்டத்தின் வைரர் பகுதியில் நேற்று கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்ய நான்கு பேர் நியமிக்கப்பட்ட நிலையில், மூன்று பேர் விஷவாயு தாக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து வீட்டின் உரிமையாளர் ஹேமந்த் காரத் உடனே அவர்களைத் தொட்டியிலிருந்து மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றார். ஆனால், ஏற்கெனவே மூன்று உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதையடுத்து, ஹேமந்த் காரத்தை போலீசார் கைது செய்தனர். உயிரிழந்தவர்கள் நாராயண பாய், ஜெயேந்திர முக்னே மற்றும் தேஜஸ் பட் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் 20 வயது உடையவர்களாவர். மேலும் நித்தேஷ் முக்னே என்பவர் தொட்டியின் வெளியில் இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
குற்றம் சாட்டப்பட்டவர் மீது 304 -ஏ அலட்சியம் காரணமாக மற்றும் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிற தொடர்புடைய விதிகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...