ஒடிசாவில் மேலும் 7 பேருக்கு கரோனா உறுதி: பாதிப்பு 68 ஆக உயர்வு
ஒடிசாவில் மேலும் 7 பேருக்கு புதிதாக கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.


புவனேஸ்வர்: ஒடிசாவில் மேலும் 7 பேருக்கு புதிதாக கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. மொத்தம் இதுவரை 68 பேர் கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரி திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை பரிசோதிக்கப்பட்ட 951 பேரின் இரத்த மாதிரிகளில் 7 பேருக்கு கரோனா நேர்மறையாக வந்துள்ளது. மொத்தம் 10,641 பேரின் இரத்த மாதிரிகள் இதுவரை பரிசோதிக்கப்பட்டுள்ளது.
கரோனா நோய்த் தொற்று அம்மாநிலத்தில் ஒருவர் பலியாகியுள்ள நிலையில், தற்போது 43 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றது.
அதேசமயம் 24 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். பத்ராக்கில் 5 பேரும், பாலசோர் மாவட்டத்தில் 2 பேரும் புதிதாக கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...