ராஜஸ்தானில் கரோனா பாதிப்பு 1,799 ஆனது: புதிதாக 64 பேருக்குத் தொற்று
ராஜஸ்தானில் புதன்கிழமை புதிதாக 64 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக


ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் புதன்கிழமை புதிதாக 64 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கரோனா நோய்த் தொற்றுக்கு ஜெய்ப்பூரில் மட்டும் 14 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்தம் கரோனாவுக்கு 26 பேர் பலியாகியுள்ளனர்.
அஜ்மீரில் 44 பேர் உள்பட மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களில் இன்று புதிதாக 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூடுதல் தலைமைச் செயலர் ரோஹித் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
தில்லியில் உள்ள ஒரு தனியார் ஆய்வகத்திற்கு 4 ஆயிரம் பேரின் இரத்த மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவற்றின் முடிவுகள் வரத் தொடங்கியுள்ளன எனவே பாதிப்பு எண்ணிக்கை உயரம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில், அஜ்மீரில் 44, டோங்க் மற்றும் கோட்டாவில் 6, ஜெய்ப்பூரில் 4, ஜோத்பூரில் 3 மற்றும் பரத்பூரில் ஒன்றும் பதிவாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் இதுவரை மொத்தம் 1,799 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...