ஜம்மு காஷ்மீரில் புதிதாக 20 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் தேவையான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 1,409 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது.
அந்த வைரஸால் இத்துடன் 21,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் 681பேர் பலியாககி உள்ளனர். இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரில் புதிதாக 20 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக காஷ்மீர் அரசின் செய்தி தொடர்பாளர் ரோஹித் கன்சால் தெரிவித்துள்ளார்.
அதில் காஷ்மீரில் 19 பேருக்கும், ஜம்முவில் ஒருவருக்கும் நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இத்துடன் ஜம்மு காஷ்மீரில் கரேனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை 427ஆக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








