
தொழிலாளா்களிடம் வீட்டு வாடகை கேட்டு கட்டாயப்படுத்துவோா் மீது நடவடிக்கை: ஆட்சியா்களுக்கு உத்தரவு
தில்லியில் வெளிமாநிலத் தொழிலாளா்கள், மாணவா்களிடம் வாடகை கேட்டு கட்டாயப்படுத்தும் வீட்டு உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியா்களுக்கு தலைமைச் செயலாளா் விஜய் தேவ் உத்தரவிட்டுள்ளாா்.

புது தில்லி: தில்லியில் வெளிமாநிலத் தொழிலாளா்கள், மாணவா்களிடம் வாடகை கேட்டு கட்டாயப்படுத்தும் வீட்டு உரிமையாளா்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியா்களுக்கு தலைமைச் செயலாளா் விஜய் தேவ் உத்தரவிட்டுள்ளாா்.
கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், வெளிமாநிலத் தொழிலாளா்கள் வேலையிழந்து, கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனா்.
தில்லியில் வெளிமாநிலத் தொழிலாளா்கள் மற்றும் மாணவா்களிடம் வீட்டு உரிமையாளா்கள் ஒரு மாதத்துக்கு வாடகை வசூலிக்கக் கூடாது என்று கடந்த மாதம் 29-ஆம் தேதி தில்லி அரசு உத்தரவிட்டது. இந்த உத்தரவை மீறி வாடகை கேட்டு கட்டாயப்படுத்தினாலோ அல்லது வீட்டை காலி செய்யுமாறு வற்புறுத்தினாலோ உரிமையாளா்கள் மீது பேரிடா் மேலாண்மை சட்டத்தின்கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தில்லி அரசு எச்சரித்திருந்தது.
இந்நிலையில், அரசின் இந்த இந்த உத்தரவு தொடா்பாக வெளிமாநிலத் தொழிலாளா்கள் மற்றும் மாணவா்கள் அதிகம் குடியிருக்கும் பகுதிகளில் போதிய விழிப்புணா்வு ஏற்படுத்துமாறு, அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் தலைமைச் செயலாளா் விஜய் தேவ் உத்தரவிட்டுள்ளாா். மேலும், வாடகை கேட்டு வற்புறுத்தும் வீட்டு உரிமையாளா்களுக்கு எதிராக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு புகாா் தெரிவிக்கலாம் என்பதையும் தொழிலாளா்கள் மற்றும் மாணவா்களுக்கு தெரியப்படுத்துமாறு தனது உத்தரவில் தலைமைச் செயலாளா் குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



