உ.பி.: ஊரடங்கை மீறி 20 பேருக்கு விருந்து கொடுத்தவருக்கு கரோனா
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 54 வயது பெண்மணி, ஊரடங்கு உத்தரவுகளை எல்லாம் மீறி, காஸியாபாத்துக்குச் சென்று 20 பேருக்கு வீட்டிலேயே


பஹ்ரைச்: உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 54 வயது பெண்மணி, ஊரடங்கு உத்தரவுகளை எல்லாம் மீறி, காஸியாபாத்துக்குச் சென்று 20 பேருக்கு வீட்டிலேயே விருந்து கொடுத்துவிட்டு திரும்பிய நிலையில், அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தல்களை எல்லாம் மீறி கடந்த வாரம் இந்த பெண்மணி விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார். இவர் மூலம் எத்தனை பேருக்கு கரோனா பரவியிருக்குமோ என்ற அச்சத்தில் காவல்துறையினர் உள்ளனர்.
அந்த பெண் மற்றும் விருந்தில் பங்கேற்றவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர்களது வீடுகள் தனிமைப்படுத்தப்பட்ட இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...