பெங்களூரு: கரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், பல்வேறு தொழில்கள் முடங்கி ஏராளமானோர் ஊதிய குறைப்பு மற்றும் வேலை இழப்புப் போன்ற பிரச்னைகளை சந்திக்கும் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.
ஆனால் கரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் முன்னின்று போராடி வரும் மருத்துவத் துறையினரும் ஊதியக் குறைப்பு, வேலை இழப்புப் போன்ற பிரச்னைகளை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
கரோனா தொற்று பரவத் தொடங்கியதும் பல்வேறு தொழில்கள் முடங்கியதைப் போலவே மருத்துவமனைகளும் முடங்கின. பொதுவான உடல் நலக் கோளாறுகள் உள்ளிட்ட சாதாரண நோய்களுக்காக மக்கள் மருத்துவமனைக்கு வருவதை முற்றிலும் தவிர்த்து விட்டனர். இதனால் தனியார் மருத்துவமனைகளும், பல்நோக்கு மருத்துவமனைகளும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டன.
கரோனா தொற்று பரவும் அபாயம் அதிகம் இருக்கும் பகுதிகளில் மருத்துவமனைகளே முதல் இடத்தில் உள்ளன. இதனால் பெரும்பாலான மருத்துவமனைகள் நோயாளிகள் இல்லாமல் வெறிச்சோடின.
இந்த நிலையில், தனியார் மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம்களுக்கான சங்கத் தலைவர் மருத்துவர் எச்.எம். பிரசன்னா கூறுகையில், தனியார் மருத்துவமனைகளில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதை கவனித்து வருகிறோம். நிலைமை சீரடையாவிட்டால் ஊதியக் குறைப்பு அல்லது பணி நீக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது வரும். ரூ.30 ஆயிரத்துக்கு மேல் ஊதியம் பெரும் செவிலியர்களுக்கு 10 - 20% ஊதியக் குறைப்பு செய்யப்படும். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ஊதியம் பெறும் மருத்துவர்களுக்கும் ஊதியக் குறைப்பு செய்யப்படும். இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. பொருளாதார நிலைமை சீரடைந்ததும் பழைய ஊதியத்தைக் கொடுக்க நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான மருத்துவமனைகளில் புறநோயாளிகள் பிரிவு முற்றிலும் மூடப்பட்டுவிட்டது. பல மருத்துவமனைகளுக்குச் சென்று புறநோயாளிகள் பிரிவில் பணியாற்றி வந்த மருத்துவர்களுக்கும் தற்போது பொருளாதார சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அதிக வாக்குப்பதிவு! மக்களுக்கும் கூட்டணிக் கட்சிகளுக்கும் இபிஎஸ் நன்றி!

நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்பு

தமிழகத்தில் மயோனைஸுக்கான தடை மேலும் ஓராண்டு நீட்டிப்பு!

மீண்டும் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் பாகம்!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


