இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

மத்திய அமைச்சர் கைலாஷ் செளத்ரிக்கு கரோனா பாதிப்பு 

மத்திய வேளாண்துறை அமைச்சர் கைலாஷ் செளத்ரிக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
மத்திய அமைச்சர் கைலாஷ் செளத்ரி
Updated On :8 ஆகஸ்ட் 2020, 12:27 pm

DIN

மத்திய வேளாண்துறை அமைச்சர் கைலாஷ் செளத்ரிக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மத்திய வேளாண் துறை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி கரோனா தொற்று வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தற்போது செளத்ரி ராஜஸ்தானின் ஜோத்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

"கரோனா அறிகுறிகள் இருந்ததைத் தொடர்ந்து மேற்கொண்ட பரிசோதனையில் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.” என சவுத்ரி தனது சுட்டுரையில் பதிவிட்டுள்ளார்.

"கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்த அனைத்து நண்பர்களும் தங்கள் குடும்ப உறுப்பினர்களிடமிருந்து சமூக இடைவெளியைக் கடைபிடிக்கவும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் கேட்டுக் கொள்கிறேன்.” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கைலாஷ் செளத்ரி தனது நாடாளுமன்றத் தொகுதியான ஜெய்சால்மருக்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.