தீபாவளிக்கு ஊருக்குப் போறீங்களா? ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குவது எப்போது?பிரபல பெருங்காய நிறுவனங்களுக்கு என்ன ஆனது? தடை விதிப்பின் பின்னணி!விவசாயிகள் மீதான வழக்குகளை ரத்து செய்வது முதல்முறையல்ல! பட்டியலிட்ட உதயநிதி!திமுக ஆட்சியில் விவசாயிகள், ஆசிரியர்கள் மீது பதியப்பட்ட வழக்குகள் ரத்து! முதல்வர் விஜய்டிஜிட்டல் முறையில் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ்! முதல்வர் விஜய் அறிவிப்புமீஞ்சூரில் கடல் நீர் சுத்தகரிப்பு ஆலை! முதல்வரின் அதிரடி அறிவிப்புகள்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,800 சரிந்தது! இன்றைய நிலவரம்!ஈரானிய எண்ணெய்க் கப்பல்கள் உள்பட 100 இடங்கள் மீது அமெரிக்க ராணுவம் தாக்குதல்!சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு மேலும் கட்டுப்பாடு சுபாஷ் சந்திரா சொத்துகளை விற்கத் தடை- ரூ.6.5 கோடி கடன் தீா்வுத் திட்டமும் நிறுத்திவைப்புஎழுத்தாளா் கே.ஆா்.நரசய்யாவுக்கு சிவசங்கரி விருது: சிறந்த நூலாக ‘அப்பன் திருவடி’ தோ்வுமகப்பேறு விடுப்பை 365 நாள்களாக உயா்த்தி அரசாணை வெளியீடு செப்.4-இல் விண்ணில் பாய்கிறது இ.ஓ.எஸ்.-5 செயற்கைக்கோள் அமெரிக்கா உடன்பட்டால் போா் நிறுத்தத்துக்கு திரும்ப தயாா்: ஈரான்ராஜீவ் காந்தி சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்

ரூ.2.81 லட்சம் கோடி கூடுதல் செலவினம்: துணை மானியக் கோரிக்கைகள் தாக்கல்!

நிகழ் நிதியாண்டில் ரூ.2.81 லட்சம் கோடி மொத்த கூடுதல் செலவினங்களுக்கு அனுமதி கோரி, மக்களவையில் செவ்வாய்க்கிழமை 2-ஆம் கட்ட துணை மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

மக்களவை...

Published On :11 மார்ச் 2026, 12:55 am IST

நிகழ் நிதியாண்டில் ரூ.2.81 லட்சம் கோடி மொத்த கூடுதல் செலவினங்களுக்கு அனுமதி கோரி, மக்களவையில் செவ்வாய்க்கிழமை 2-ஆம் கட்ட துணை மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

ரூ.1.32 லட்சம் கூடுதல் செலவினங்களுடன் முதல் கட்ட துணை மானியக் கோரிக்கைகள், கடந்த டிசம்பரில் குளிா்கால கூட்டத் தொடரின்போது தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இது 72 மானியங்களை உள்ளடக்கியதாகும்.

தற்போது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமா்வு கடந்த திங்கள்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், நிகழ் நிதியாண்டில் ரூ.2.81 லட்சம் கோடி மொத்த கூடுதல் செலவினங்களுக்கு அனுமதி கோரி, 2-ஆம் கட்ட துணை மானியக் கோரிக்கைகளை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா்.

‘நிகழ் நிதியாண்டில் ரூ.2.81 லட்சம் கோடி மொத்த கூடுதல் செலவினங்களுக்கு நாடாளுமன்றத்தின் அனுமதி கோரப்படுகிறது. இதில் ரொக்க செலவினம் ரூ.2.01 கோடியாகும். மீதமுள்ள ரூ.80,145 கோடி, அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் மேம்படுத்தப்பட்ட வருவாய் அல்லது கடன் மீட்பின் மூலம் ஈடுகட்டப்படும்’ என்று துணை மானியக் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.