இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

தெலங்கானாவில் புதிதாக 1,982 பேருக்கு கரோனா: 12 பேர் பலி

தெலங்கானாவில் புதிதாக 1,982 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 12 பேர் உயிரிழந்தனர்.

News image
தெலங்கானாவில் புதிதாக 1,982 பேருக்கு கரோனா: 12 பேர் பலி
Updated On :9 ஆகஸ்ட் 2020, 9:29 am

DIN

தெலங்கானாவில் புதிதாக 1,982 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 12 பேர் உயிரிழந்தனர்.

நாட்டில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்தவகையில் தெலங்கானாவிலும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக தெலங்கானா மாநில சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 1,982 பேர் புதிதாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 79,495-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 12 பேர் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்பு 627-ஆக அதிகரித்துள்ளது. நேற்று (சனிக்கிழமை) மட்டும் 1,669 பேர் குணமடைந்த நிலையில், மொத்தமாக 55,999 பேர் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 16,112 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.