கரோனா: அருணாச்சலில் 38 முன்கள வீரர்கள் உட்பட புதிதாக 68 பேர் பலி
அருணாச்சலில் கடந்த 24 மணிநேரத்தில் 36 முன்கள வீரர்கள் உட்பட புதிதாக 68 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.


அருணாச்சலில் கடந்த 24 மணிநேரத்தில் 36 முன்கள வீரர்கள் உட்பட புதிதாக 68 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இதனால் மொத்த கரோனா பாதிப்பு 2,117-ஆக அதிகரித்துள்ளது.
இது தொடர்பாக அருணாச்சலப் பிரதேச அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கரோனா தொற்றால் உயிரிழந்தோரில்,
கேபிடல் காம்ப்ளக்ஸ் பிராந்தியத்தில் 10 பேரும், கிழக்கு காமெங் மாவட்டத்தில் 20 பேரும், மேற்கு சியாங்கில் 12 பேரும், டிராப் மற்றும் லோயர் சியாங்கில் தலா ஐந்து பேரும் அடங்குவர்.
மேற்கு காமெங் மற்றும் நம்சாயில் பகுதியில் தலா நான்கு பேரும், கிழக்கு சியாங் மற்றும் தவாங்கில் தலா மூன்று பேரும், பாப்பம்பேர்ம், சாங்காங் பகுதியில் தலா ஒருவரும் உயிரிழந்தனர். கரோனாவால் நிகழ்ந்த உயிரிழப்புகளில் 36 பேர் முன்கள பணியாளர்கள். இதனால் கரோனாவால் பாதிக்கப்பட்ட முன்கள பணியாளர்களின் எண்ணிக்கை 266-ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 104 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை மொத்தமாக 1,430 பேர் குணமடைந்துள்ளனர். 684 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று (சனிக்கிழமை) மட்டும் 2,866 பேருக்கு தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இதுவரை 1,04,833 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...