இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கரோனாவை குணப்படுத்தும் என அப்பளத்தை அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சருக்கு கரோனா பாதிப்பு

கரோனாவைக் குணப்படுத்தும் என சில நாள்களுக்கு முன்பு அப்பளத்தை அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வாலுக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

News image
மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வாலுக்கு கரோனா
Updated On :9 ஆகஸ்ட் 2020, 6:02 am

DIN

கரோனாவைக் குணப்படுத்தும் என சில நாள்களுக்கு முன்பு அப்பளத்தை அறிமுகப்படுத்திய மத்திய அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வாலுக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

கரோனா அறிகுறிகள் இருந்ததைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ஜல்சக்தி மற்றும் பாராளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் அர்ஜுன் ராம் மெக்வாலுக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியது.

இரண்டுமுறை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இரண்டாவது முறை அவருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

தொடர்ந்து சிகிச்சைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த நாள்களில் அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள மெக்வால் கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் ராஜஸ்தான் நிறுவனம் தயாரித்த அப்பளத்தை அறிமுகப்படுத்தியிருந்த அமைச்சர் மெக்வால், “கரோனாவிற்கு எதிராக எதிர்த்து போராட ஆண்டிபாடிகளை உருவாக்க உதவும்.” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.