இந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

என்சிபி எம்எல்ஏ-க்கள் யாரும் பாஜகவில் இணையவில்லை: நவாப் மாலிக்

மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) எம்எல்ஏ-க்கள் பாஜகவில் இணையப்போவதாக வெளியான தகவலை மாநில அமைச்சரும், என்சிபி தலைவருமான நவாப் மாலிக் மறுத்துள்ளார்.

News image
மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) எம்எல்ஏ-க்கள் பாஜகவில் இணையப்போவதாக வெளியான தகவலை நவாப் மாலிக் மறுத்துள்ளார். (கோப்புப்படம்)
Updated On :10 ஆகஸ்ட் 2020, 11:27 am

DIN


மகாராஷ்டிரத்தில் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி) எம்எல்ஏ-க்கள் பாஜகவில் இணையப்போவதாக வெளியான தகவலை மாநில அமைச்சரும், என்சிபி தலைவருமான நவாப் மாலிக் மறுத்துள்ளார்.

இதுபற்றி நவாப் மாலிக் சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

"என்சிபி எம்எல்ஏ-க்கள் 12 பேர் பாஜகவில் இணையப்போவதாக சிலர் வதந்திகளைப் பரப்புகின்றனர். இது ஆதாரமற்ற, இட்டுக்கட்டப்பட்ட செய்தி. தேர்தலுக்கு முன்பு பாஜகவுக்குச் சென்ற எம்எல்ஏ-க்கள்தான் மீண்டும் என்சிபி-க்குத் திரும்ப விரும்புகின்றனர். ஆனால், இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. விரைவில் முடிவு எடுக்கப்பட்டு, முறையாக அறிவிக்கப்படும்." என்று பதிவிட்டுள்ளார் நவாப் மாலிக்.

288 தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் 105 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதைத் தொடர்ந்து சிவசேனை 56 இடங்களிலும், என்சிபி 54 இடங்களிலும், காங்கிரஸ் 44 இடங்களிலும் வெற்றி பெற்றது. இதில் பாஜக - சிவசேனை கூட்டணிக்கே பெரும்பான்மை இருந்தது. எனினும் முதல்வர் பதவிக்கு ஏற்பட்ட பிரச்னை காரணமாக, என்சிபி மற்றும் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து சிவசேனை ஆட்சி அமைத்தது. உத்தவ் தாக்கரே முதல்வராகப் பதவியேற்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.