உ.பி: ராமரை வணங்கியதால் 2 இஸ்லாமிய பெண்களுக்கு கொலை மிரட்டல்
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் பகுதியில் ராமரை வணங்கியதால் 2 இலாமிய பெண்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.


உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் பகுதியில் ராமரை வணங்கியதால் 2 இலாமிய பெண்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் பகுதியில் ரூபி ஆஸிப்கான், நர்கீஸ் மெஹபூபா ஆகிய 2 இஸ்லாமிய பெண்கள் பாஜக பெண்கள் முன்னணியில் உறுப்பினராக உள்ளனர்.
இதனிடையே இந்த 2 பெண்களும் அயோத்தி ராமர் கோயில் பூமிபூஜை நடைபெற்ற நாளில் குடும்பத்துடன் ராமரை ஆரத்தி எடுத்து வணங்கினர். மேலும் ராமர்கோயில் கட்டுமானத்திற்காக ரூ. 5,100 வழங்கியுள்ளனர். இதனால் தங்கள் உயிருக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், இஸ்லாமிய மதத்தை விட்டுச் செல்லும்படியும் மிரட்டல் வருவதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக காவல்நிலையத்தில் 2 பெண்களும் அளித்துள்ள புகாரில், இஸ்லாமிய உடையணிந்து ராமரை வணங்குவது போன்று சுவரொட்டிகள் ஒட்டப்படுவதாகவும், இரண்டு பெண்களும் இஸ்லாமியத்தை விட்டுச் செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தங்களுக்கு தொடர்ந்து கொலை மிரட்டலும் வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...