மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

‘தில்லியில் இரவுநேர பொதுமுடக்கம் இல்லை’: நீதிமன்றத்தில் தில்லி அரசு பதில்

தில்லியில் இரவுநேரப் பொதுமுடக்கம் குறித்த உத்தரவுகள் எதுவும் இல்லை என உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்துள்ளது.

News image
‘தில்லியில் இரவுநேர பொதுமுடக்கம் இல்லை’: நீதிமன்றத்தில் தில்லி அரசு பதில்
Updated On :3 டிசம்பர் 2020, 11:05 am

DIN

தில்லியில் இரவுநேரப் பொதுமுடக்கம் குறித்த உத்தரவுகள் எதுவும் இல்லை என உயர்நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்துள்ளது.

கரோனா தொற்று பாதிப்புகள் குறித்த தில்லி உயர்நீதிமன்றத்தின் வழக்கு விசாரணை வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் , “தில்லியில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தேவையான அனைத்துவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்தார்.

கரோனா விதிமீறல்கள் தொடர்பாக 2 லட்சத்துக்கும் மேற்பட்டோரிடமிருந்து ரூ.17 கோடிக்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தில்லி அரசு தெரிவித்தது.

கரோனா தொற்று தொடர்பாக விதிக்கப்பட்டக் கட்டுப்பாடுகள் நடப்பாண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை அமலில் உள்ளதாகத் தெரிவித்த தில்லி அரசு இரவுநேர பொதுமுடக்கம் விதிப்பது குறித்த உத்தரவுகள் எதுவும் இல்லை எனக் குறிப்பிட்டது.

அதனைத் தொடர்ந்து தில்லியில் கரோனா தொற்றை அடையாளம் காண விரிவான அளவில் சோதனையில் கவனம் செலுத்துமாறு நீதிமன்றம் தில்லி அரசிடம் கேட்டுக் கொண்டது. இந்த வழக்கின் விசாரணையை டிசம்பர் 14ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.