‘விவசாயிகள் பெயரில் நாட்டை சிதைக்கும் முயற்சியில் பாகிஸ்தான்’: ஹரியாணா அமைச்சர்
விவசாயிகளின் பெயரால் நாட்டின் ஒற்றுமையை பாகிஸ்தான், சீனா நாடுகள் சீர்குலைக்க முயல்வதாக ஹரியாணா பாஜக அமைச்சர் ஜெய் பிரகாஷ் தலால் தெரிவித்துள்ளார்.


விவசாயிகளின் பெயரால் நாட்டின் உறுதித்தன்மையை சீர்குலைக்க பாகிஸ்தான், சீனா நாடுகள் முயல்வதாக ஹரியாணா பாஜக அமைச்சர் ஜெய் பிரகாஷ் தலால் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல்வேறு விவசாய சங்கங்களைச் சேர்ந்த விவசாயிகள் தலைநகர் தில்லியில் கடந்த 8 நாட்களாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் பாஜகவைச் சேர்ந்த ஹரியாணா அமைச்சர் ஜெய் பிரகாஷ் தலால் தெரிவித்த கருத்து சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. விவசாயிகள் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த அவர் தில்லியில் நடைபெறும் போராட்டத்தின் பின்னணியில் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் உள்ளன எனத் தெரிவித்தார்.
மேலும் சீனா, பாகிஸ்தான் மற்றும் பிற எதிரி நாட்டு சக்திகள் நாட்டின் உறுதித்தன்மையை குலைக்க முயற்சித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...