மேற்கு வங்கத்தில் நட்டாவுக்கு கருப்புக் கொடி
மேற்கு வங்கத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு இன்று (புதன்கிழமை) கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.


மேற்கு வங்கத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவுக்கு இன்று (புதன்கிழமை) கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
ஜெ.பி. நட்டா 2 நாள் பயணமாக இன்று மேற்கு வங்கம் சென்றார். கட்சியின் தேர்தல் அலுவலகத்தைத் திறக்க கொல்கத்தாவில் ஹாஸ்டிங்க்ஸ் பகுதிக்கு வந்தபோது அவருக்கு சுமார் 50 பேர் கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். புதிதாகத் திறக்கப்பட்ட அலுவலகம் முன்பு நிகழ்ந்த இந்த சம்பவத்தின்போது 'பாஜக திரும்பப் போ' என்ற கோஷமும் எழுப்பப்பட்டது.
இதையறிந்து கட்டடத்தினுள் இருந்த பாஜக ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாஜக தலைவர்களும் தலையிடத் தொடங்க, காவல் துறையினர் உடனடியாகத் தலையிட்டு இருதரப்பையும் தடுத்து நிறுத்தினர்.
இதன்பிறகு, போராட்டக்காரர்கள் அந்தப் பகுதியிலிருந்து வெளியேறினர்.
இருதரப்பு அமைதியாக வெளியேறியதாக கொல்கத்தா காவல் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...