மேற்குவங்கத்தில் பாஜக தலைவர் வாகனம் மீது தாக்குதல்: அமித்ஷா கண்டனம்
மேற்கு வங்க மாநிலத்தில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் பாதுகாப்பு வாகனம் மீது நடத்தப்பட்டத் தாக்குதலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.


மேற்கு வங்க மாநிலத்தில், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டாவின் பாதுகாப்பு வாகனம் மீது நடத்தப்பட்டத் தாக்குதலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா 2 நாள் பயணமாக மேற்கு வங்கம் சென்றுள்ளார். இந்நிலையில் கொல்கத்தா அருகே உள்ள கட்சி நிகழ்ச்சிக்காக வைர துறைமுகத்திற்கு சென்று கொண்டிருந்தபோது அவரது பாதுகாப்பு வாகனம் தாக்குதலுக்குள்ளானது.
மோட்டார் சைக்கிள்களில் வந்த சில பாஜக தொண்டர்கள் குச்சிகளால் தாக்கப்பட்டனர். கற்கள், காலி பாட்டில்கள் போன்றவற்றை நட்டா மற்றும் அவரது பாதுகாப்பு வாகனங்கள் மீது வீசி திரிணமூல் தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர். எனினும், நட்டா வந்த வாகனம் குண்டு துளைக்காத கவச வாகனம் என்பதால், அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.
இந்நிலையில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவின் வாகனம் மீதான தாக்குதலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சுட்டுரைப் பதிவில் தெரிவித்துள்ள அவர், “ஜே.பி.நட்டா மீதான தாக்குதல் கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. வன்முறை சம்பவங்களுக்கு மாநில அரசு பதிலளிக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...