இந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்: கர்நாடகத்தில் பேருந்து சேவை பாதிப்பு

கர்நாடகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், பேருந்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

News image
கர்நாடகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்
Updated On :11 டிசம்பர் 2020, 7:31 am

DIN

கர்நாடகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், பேருந்து சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களுக்கு வழங்கும் சலுகைகளை வழங்க வேண்டும் என்றும், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கர்நாடகத்தில் பெங்களூரு பெருநகர போக்குவரத்துக் கழகம், கர்நாடக போக்குவரத்துக் கழகம், வடகிழக்கு கர்நாடக போக்குவரத்துக் கழகம் மற்றும் வடமேற்கு கர்நாடக போக்குவரத்துக் கழகத்தை சேர்ந்த ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசு ஊழியர்களுக்கு நிகரான சலுகைகளையும், ஊக்கத்தொகைகளையும் வழங்க வேண்டும் என்றும், கரோனா முன்களப்பணியில் உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கு 30 லட்சம் வழங்குவதைப் போல போக்குவரத்து ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால் பெங்களூரு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.