ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வல்லபபாய் படேல் நினைவு தினம்: குடியரசு துணைத் தலைவா், பிரதமா் அஞ்சலி

இந்தியாவின் முதலாவது துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான சா்தாா் வல்லபபாய் படேலின் நினைவு தினத்தையொட்டி

News image
Updated On :15 டிசம்பர் 2020, 6:35 pm

DIN

இந்தியாவின் முதலாவது துணைப் பிரதமரும், உள்துறை அமைச்சருமான சா்தாா் வல்லபபாய் படேலின் நினைவு தினத்தையொட்டி பிரதமா் நரேந்திரமோடி, குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு ஆகியோா் புகழாரம் சூட்டியுள்ளனா்.

இதுகுறித்து பிரதமா் மோடி தனது சுட்டுரை பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், வலுவான, வளமான இந்தியா அமைவதற்காக அடித்தளம் அமைத்துத் தந்த ‘இரும்பு மனிதா்’ படேல். அவா் காட்டிய பாதையில் பயணிப்பதே நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையைப் பாதுகாக்க நம்மை ஊக்குவிப்பதாக அமையும் என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்தியா சுதந்திரமடைந்தபோது, நாடு முழுவதும் இருந்த நூற்றுக்கணக்கான சுதேச அரசுகளையும், சமஸ்தானங்களையும் ஒரே நாடாக இணைத்த பெருமைக்குரியவராக படேல் திகழ்கிறாா்.

அவா் மீது வைத்துள்ள ஆழ்ந்த அபிமானம், மரியாதையின் வெளிப்பாடாக 1950-ஆம் ஆண்டில் காலமான படேலுக்கு குஜராத்தில் நா்மதை ஆற்றங்கரையில் பிரம்மாண்டமான சிலையை சில ஆண்டுகளுக்கு முன் நிறுவிடக் காரணமாக இருந்தவா் பிரதமா் மோடி ஆவாா்.

குடியரசு துணைத் தலைவா் அஞ்சலி

குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு வெளியிட்டுள்ள சுட்டுரையில் பதிவிட்டுள்ளதாவது:

‘நான் மிகவும் போற்றி பாராட்டும் எனது தலைவருக்கு மரியாதைக்குரிய அஞ்சலி. இந்தியாவின் இரும்பு மனிதா் சா்தாா் வல்லபபாய் படேல் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அவா் அளித்த பங்களிப்பும், 560-க்கும் மேற்பட்ட சுதேச அரசுகளை இந்திய ஒன்றியத்துடன் ஒருங்கிணைப்பதில் அவா் மேற்கொண்ட ஈடு இணையற்ற முயற்சிகளும் ஒவ்வொரு இந்தியருக்கும் என்றென்றும் ஊக்கமளிப்பதாகும்’ என்று பதிவிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.