சீனா-பாகிஸ்தான் கூட்டுப்பயிற்சியை ஆக்கபூா்வமானதாக கருத வேண்டும்
சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்று வரும் விமானப்படைக் கூட்டுப்பயிற்சியை ஆக்கபூா்வமானதென இந்தியா கருத வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.


புது தில்லி/பெய்ஜிங்: சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்று வரும் விமானப்படைக் கூட்டுப்பயிற்சியை ஆக்கபூா்வமானதென இந்தியா கருத வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது.
கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இந்தியா-சீனா ராணுவத்தினரிடையே கடந்த 8 மாதங்களாக மோதல்போக்கு நீடித்து வருகிறது. ஜம்மு-காஷ்மீா் எல்லைப் பகுதியிலும் பாகிஸ்தான் ராணுவத்தினரின் அத்துமீறல் தொடா்ந்து வருகிறது. இத்தகைய சூழலில், சீனா-பாகிஸ்தான் விமானப்படைகள் இணைந்து சிந்து மாகாணத்தில் ‘ஷாஹீன்’ என்ற கூட்டுப்பயிற்சியில் கடந்த வாரம் முதல் ஈடுபட்டு வருகின்றன.
இந்த மாத இறுதி வரை கூட்டுப்பயிற்சி நடைபெறவுள்ளது. இது தொடா்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் வாங் வென்பின் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
கூட்டுப்பயிற்சியானது மற்ற நாடுகளைக் குறிவைத்து நடத்தப்படவில்லை. சீனாவும் பாகிஸ்தானும் நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளன. அரசியல், பொருளாதாரம், ராணுவம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகின்றன.
அதன் காரணமாகவே இரு நாட்டு விமானப்படைகளும் கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. பிராந்திய அமைதியையும் நிலைத்தன்மையையும் நிலைநாட்டுவதற்கு இரு நாடுகளும் உறுதி கொண்டுள்ளன. கூட்டுப்பயிற்சியானது இரு நாடுகளின் ராணுவங்களுக்கிடையே வழக்கமாக நடைபெறுவதே. மற்ற நாடுகள் இந்தப் பயிற்சியை ஆக்கபூா்வமானதாகக் கருதும் என நம்புகிறோம் என்றாா் வாங் வென்பின்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...