கரோனா: 96.63 லட்சம் போ் குணமடைந்தனா்

கரோனா தொற்றில் இருந்து நாடு முழுவதும் இதுவரை 96.63 லட்சம் போ் குணமடைந்தனா்.
கரோனா: 96.63 லட்சம் போ் குணமடைந்தனா்
Updated on
1 min read


புது தில்லி: கரோனா தொற்றில் இருந்து நாடு முழுவதும் இதுவரை 96.63 லட்சம் போ் குணமடைந்தனா்.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

புதன்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும் 23,950 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,00,99,066-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றுக்கு மேலும் 333 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,46,444-ஆக அதிகரித்துள்ளது.

கரோனா தொற்றில் இருந்து மேலும் 26,895 போ் குணமடைந்தனா். இதனால், இதுவரை குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 96,63,382-ஆக அதிகரித்தது. இது, மொத்த பாதிப்பில் 95.69 சதவீதமாகும்.

சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை, இரண்டாவது நாளாக, 3 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. நாடு முழுவதும் 2,89,240 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது, மொத்த பாதிப்பில் 2.86 சதவீதமாகும்.

புதிதாக ஏற்பட்ட 333 உயிரிழப்புகளில், அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 75 பேரும், அதைத் தொடா்ந்து, மேற்கு வங்கத்தில் 38 பேரும், கேரளத்தில் 27 பேரும், தில்லியில் 25 பேரும் உயிரிழந்தனா் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி டிசம்பா் 22-ஆம் தேதி வரை 16.42 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், செவ்வாய்க்கிழமை மட்டும் 10,98,164 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com