மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பஞ்சாபில் ஜனவரி 1 முதல் இரவு நேர பொதுமுடக்கம் ரத்து

கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் பஞ்சாபில் 2021 ஜனவரி 1ஆம் தேதி முதல் இரவு நேரப் பொதுமுடக்கம் ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

News image

பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்

Updated On :30 டிசம்பர் 2020, 3:49 pm

DIN

கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் பஞ்சாபில் 2021 ஜனவரி 1ஆம் தேதி முதல் இரவு நேரப் பொதுமுடக்கம் ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு புதன்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

கரோனா தொற்று காரணமாக கடந்த டிசம்பர் 1 முதல் 31 வரை இரவுநேரப் பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கரோனா தொற்று பாதிப்புகள் படிப்படியாகக் குறைந்ததையடுத்து மாநிலத்தில் 2021 ஜனவரி மாதம் 1ஆம் தேதி முதல் இரவுநேரப் பொதுமுடக்கம் ரத்து செய்யப்படுவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

அனைத்து நகரங்களிலும் நகரங்களிலும் இரவு நேரப் பொதுமுடக்க உத்தரவு மீதான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன. மேலும் 100 மற்றும் 250 பேர் வரை பங்கேற்க அனுமதிக்கப்பட்டிருந்த கூட்டங்களுக்கு 200 மற்றும் 500 பேர் வரை தளர்த்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் கோவிட் -19 நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.