தாஜ் மகாலைப் பார்வையிட்டு வருகிறார் டிரம்ப்
உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ் மகாலைக் காண வருகை தந்திருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலனியா, மகள் இவாங்கா ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


ஆக்ரா: உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள தாஜ் மகாலைக் காண வருகை தந்திருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அவரது மனைவி மெலனியா, மகள் இவாங்கா ஆகியோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உத்தரப்பிரதேச மாநில ஆளுநர் ஆனந்தி பென் படேல், முதல்வர் ஆதித்யநாத் உள்ளிட்டோர், டிரம்ப் தம்பதிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்நிலையில், டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலானியா டிரம்ப் ஆகியோர் தற்போது தாஜ் மகால் வந்தடைந்துள்ளனர். அங்கு மனைவியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட டிரம்ப், வருகைப் பதிவேட்டில் தன்னுடைய வருகையைக் குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து தற்போது மனைவியுடன் இணைந்து தாஜ் மகாலைப் பார்வையிட்டு வருகிறார் டிரம்ப்.
அவருக்கு சுற்றுலா வழிகாட்டி, தாஜ் மகாலின் சிறப்புகள் குறித்து விளக்கினார். தாஜ் மகால் முன்பு டொனால்ட் டிரம்ப் - மெலனியா தம்பதி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பிறகு, தாஜ் மகாலில் உள்ள விருந்தினர் பதிவேட்டில் டிரம்ப் கையெழுத்திட்டார்.
முன்னதாக இன்று காலை ஆமதாபாத் விமான நிலையம் வந்தடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்டோரை பிரதமர் மோடி வரவேற்றனார். பின்னர் தனித்தனி வாகனங்களில் சபர்மதி ஆசிரமம் சென்றனர்.

அங்கு மகாத்மா காந்தியின் புகைப்படத்துக்கு மரியாதை செலுத்திய டிரம்ப் தம்பதி, இராட்டையில் நூல் நூற்று மகிழ்ந்தனர்.
டிரம்ப் வருகையை முன்னிட்டு ஆமதாபாத்தில் உள்ள மொடெரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நமஸ்தே டிரம்ப் என்ற சிறிப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், இரு தலைவர்களும் உரையாற்றினர்.
இவ்விரு முக்கிய நிகழ்ச்சிகளும் நிறைவு பெற்றதை அடுத்து, பிரதமர் மோடி புது தில்லி விரைந்தார். பிறகு, டொனால்ட் டிரம்ப், மனைவி மற்றும் மகள், அமெரிக்க உயர் மட்ட அதிகாரிகள் குழுவினருடன் ஆக்ரா சென்றுள்ளார்.
அங்கு தாஜ் மகாலை பார்வையிட்ட பிறகு, புது தில்லி செல்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...