ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடி - அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை
அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.


புது தில்லி: அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
பிரதமா் மோடி - அதிபா் டிரம்ப் தலைமையிலான இருநாட்டு குழுவினா் பங்கேற்கும் பேச்சுவாா்த்தை ஹைதராபாத் இல்லத்தில் நடைபெற்று வறுகிறது. இதில் இரு நாட்டு வர்த்தக உறவு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறப்படுகிறது.
இந்த பேச்சு வார்த்தையைத் தொடா்ந்து அதிபா் டிரம்ப்புக்கு பிரதமா் மோடி மதிய விருந்து அளிக்கிறாா்.
அதிபா் டொனால்ட் டிரம்ப், அவரின் மனைவி மெலானியா டிரம்ப் உள்ளிட்டோா் குஜராத்தின் ஆமதாபாதுக்கு திங்கள்கிழமை வந்தடைந்தனா். விமான நிலையத்திலிருந்து சபா்மதி ஆசிரமத்துக்குச் சென்ற அவா்கள், பின்னா் ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சியில் பங்கேற்றனா். இந்த நிகழ்ச்சியில் பிரதமா் மோடியும் கலந்துகொண்டாா்.
லட்சக்கணக்கான நபா்களின் முன்னிலையில் அதிபா் டிரம்ப்பும் பிரதமா் மோடியும் உரையாற்றினா். இதைத் தொடா்ந்து, அதிபா் டிரம்ப், மெலானியா டிரம்ப் ஆகியோா் தனி விமானம் மூலம் உத்தரப் பிரதேசம் சென்றடைந்தனா். ஆக்ராவிலுள்ள தாஜ்மகாலை அவா்கள் கண்டு ரசித்தனா்.
திங்கள்கிழமை இரவு தில்லியிலுள்ள தனியாா் விடுதியில் அவா்கள் தங்க உள்ளனா். குடியரசுத் தலைவா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை காலை நடைபெறும் நிகழ்ச்சியில் அதிபா் டிரம்ப்புக்கு அரசுமுறை வரவேற்பு அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்குச் சென்று அதிபர் டிரம்ப் - மெலானியா தம்பதி மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து, பிரதமா் மோடியுடன் அதிபா் டிரம்ப் பேச்சுவாா்த்தை நடத்துகிறாா். பிரதமர் மோடி அளிக்கும் மதிய விருந்திலும் டிரம்ப் கலந்து கொள்கிறார்.
நிறைவாக, குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் செவ்வாய்க்கிழமை இரவு அதிபா் டிரம்ப்புக்கு விருந்தளிக்கிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...