/

வடகிழக்கு தில்லியில் மார்ச் 7 வரை பள்ளிகளுக்கு விடுமுறை: தேர்வுகள் ஒத்திவைப்பு

வடகிழக்கு தில்லியில் மார்ச் 7-ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என தில்லி கல்வி இயக்கம் இன்று (சனிக்கிழமை) அறிவித்தது.

News image
Updated On :29 பிப்ரவரி 2020, 1:06 pm

DIN


வடகிழக்கு தில்லியில் மார்ச் 7-ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என தில்லி கல்வி இயக்கம் இன்று (சனிக்கிழமை) அறிவித்தது.

வடகிழக்கு தில்லியில் இந்த வார தொடக்கத்தில் நிகழ்ந்த வன்முறை காரணமாக இதுவரை 42 பேர் பலியாகியுள்ளனர். கடந்த மூன்று நாட்களாகத்தான் இந்த வன்முறை தணிந்து அங்கு இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்த வன்முறை காரணமாக வடகிழக்கு தில்லியில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிப்பதாக அலுவலர்கள் கடந்த செவ்வாய்கிழமை உத்தரவிட்டனர். இந்தப் பகுதிகளில் பொதுத் தேர்வை ரத்து செய்யுமாறு தில்லி அரசு கோரிக்கை விடுத்தது.

இதையடுத்து, 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுடன் 11-ஆம் வகுப்பு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டன. 

இதனிடையே, வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு தில்லி பகுதிகளில் இருக்கும் பொதுத்தேர்வு மையங்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிப்பதை உறுதி செய்யுமாறு தில்லி நகர காவல் துறைக்கு தில்லி உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இந்நிலையில், வடகிழக்கு தில்லியில் மார்ச் 7-ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படாது என தில்லி கல்வி இயக்கம் அறிவித்துள்ளது. மேலும் இறுதித் தேர்வுகளை ஒத்திவைப்பதாக அறிவித்துள்ள கல்வி இயக்கம், தேர்வுகளுக்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது. வடகிழக்கு தில்லி தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு திட்டமிட்டபடி தேர்வுகள் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.