திரிசூர்: திரிசூரில் உள்ள ராமவர்மாபுரம் அரசு முதியோர் இல்லம் விழாக் கோலம் பூண்டிருந்தது. காரணம், அங்கு தங்கியிருந்த இரண்டு முதியவர்கள் தங்களது வாழ்க்கையைத் தொடங்கியிருப்பதுதான்.
67 வயதான கோச்சானியன் - 65 வயது லஷ்மி அம்மாள் இருவரது திருமணம் கடந்த வாரம் வெகுக் கோலாகலமாக நடைபெற்றது. இது வரலாற்றில் புதிய விஷயமாகப் பதிவாகியுள்ளது. முதியோர் இல்லங்களில் இதுபோன்ற திருமணம் நடந்திருப்பது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.
இவர்களது திருமணத்தில் கேரள அமைச்சர், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்களும் பங்கேற்றனர்.
திரிசூர், இறிஞ்சலக்குடி அருகே லஷ்மி அம்மாளின் கணவரிடம் உதவியாளராக இருந்தவர் கோச்சானியன். 21 ஆண்டுகளுக்கு முன்பு, லஷ்மி அம்மாளின் கணவர் இறந்த பிறகும், லஷ்மி அம்மாளுக்குத் தேவையான உதவிகளை கோச்சானியன் செய்து வந்தார். இந்த நிலையில், கோச்சானியன் திருமணம் முடிந்து குடும்பத்துடன் வேறு இடம் சென்றுவிட்டார்.
பல ஆண்டுகள் கழிந்த நிலையில், கோச்சானியனின் மனைவி உயிரிழந்துவிட, அவரது குடும்பத்தினர் கோச்சானியனை கைவிட்டுவிட்டனர். அப்போதுதான் அவர் திரிசூரில் உள்ள முதியோர் இல்லத்துக்கு வருகிறார். அங்கு தங்கியிருந்த லஷ்மி அம்மாளை மீண்டும் சந்திக்கிறார்.
இவர்களுக்கு இடையே தோழமை இருப்பதைக் கண்ட முதியோர் இல்ல கண்காணிப்பாளர், அவர்களை திருமணம் செய்து கொள்ள ஊக்கப்படுத்தினார். இவர்களது திருமணம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
முதியோர் இல்லங்களில் தங்கியிருக்கும் முதியவர்கள் தங்களது தனிமையை ஒழிக்க, இதுபோன்று திருமணங்களை நடத்த ஊக்கப்படுத்த வேண்டும் என்று கேரள மாநில சமூக நீதித் துறை வலியுறுத்தி வரும் நிலையில், முதல் முறையாக இதுபோன்ற திருமணம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

வெள்ளிச்சுடரே.... இரண்டு வானம் முதல் பாடல்!

குடும்பக் கதையில் நடிக்கும் கவின்!

அயோத்தி இயக்குநர் இயக்கத்தில் விஜய் ஆண்டனி!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


